50 ஆண்​டு​களைக் கடந்த நடிகர் ரஜினி​காந்​துக்கு சிறப்பு விருது – சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்!!

சென்னை:
சர்​வ​தேச திரைப்பட விழா சென்னையில் நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் தொடங்கி வைத்​தார். விழா​வில் சினி​மா​வில் 50 ஆண்​டு​களைக் கடந்த நடிகர் ரஜினி​காந்​துக்கு சிறப்பு விருது வழங்​கப்​பட்​டது.

தமிழக அரசு மற்​றும் தேசிய திரைப்பட வளர்ச்​சிக் கழகத்​தின் ஆதர​வுடன் இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷன் நடத்​தும் 23-வது சென்னை சர்​வ​தேச திரைப்பட விழாவை நேற்று சென்னை சத்​யம் திரையரங்​கில் தமிழ் வளர்ச்​சித் துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் தொடங்கி வைத்​தார்.

நிகழ்ச்​சிக்கு அமைப்​பின் தலை​வர் சிவன் கண்​ணன் தலைமை தாங்​கி​னார். துணைத் தலை​வர் ஆனந்த் ரங்​க​சாமி, பொதுச்​செய​லா​ளர் தங்​க​ராஜ் முன்​னிலை வகித்​தனர். விழா​வின்​போது சினி​மா​வில் 50 ஆண்​டு​களைக் கடந்த ரஜினி​காந்​துக்கு சிறப்பு விருது வழங்​கப்​பட்​டது.

இந்த விருதை அமைச்​சர் சாமி​நாதனிடம் இருந்து ரஜினி​காந்த் மகள் ஐஸ்​வர்யா பெற்​றுக்​கொண்டார். டிச.18-ம் தேதி வரை நடைபெறும் இந்த சர்​வ​தேச திரைப்பட விழா​வில் தமிழிலிருந்து ‘3 பி.எச்​.கே.’, ‘மாமன்’, ‘அலங்​கு’,‘காதல் என்​பது பொது​வுடமை’, ‘மாயக்​கூத்​து’, ‘பறந்து போ’, ‘டூரிஸ்ட் பேமிலி’, ‘வேம்​பு’ உள்​ளிட்ட 12 படங்​கள் திரை​யிடப்​படு​கின்​றன.

ரஜினி​காந்​தின் 75-வது பிறந்​த​நாளை ஒட்​டி, அவரது 50 ஆண்டு கலைச் சேவையைகவுரவிக்​கும் வகை​யில் இன்று (டிச.12) ‘பாட்​ஷா’ படம் திரையிடப்​படு​வது குறிப்​பிடத்​தக்​கது.

விழா​வில் அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் பேசி​ய​தாவது: சென்னை திரைப்பட விழா​வில். இந்த ஆண்டு 51 நாடு​களி​லிருந்து தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 122 தலைசிறந்த படங்​கள் திரை​யிடப்பட உள்​ளன. திரைப்​படத் துறைக்​கும், திரா​விட இயக்​கத்​துக்​கும் உள்ள உறவைப் பிரிக்க முடி​யாது.

இத்​திரைப்பட விழா 2008-ல் தொடங்​கப்​பட்​ட​போது ரூ.25 லட்​சம் நிதி வழங்​கப்​பட்​டது. தற்​போது திமுக ஆட்​சி​யில் கடந்த 2023-ல் ரூ.85 லட்​ச​மாக​வும், இந்த ஆண்டு ரூ.95 லட்​ச​மாக​வும் நிதி உயர்த்தி வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​போல் கோவா சர்​வ​தேச திரைப்பட விழாவுக்​கான மானி​யத்​தை​யும் ரூ.15 லட்​ச​மாக உயர்த்தி வழங்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்​. இவ்​​வாறு அவர்​ கூறி​னார்​. இந்​நிகழ்​வில்​ நடிகை சிம்​ரன்​, இயக்​குநர்​ அபிஷன்​ ஜீவநித்​ உள்​ளிட்​டோரும்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *