விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொண்டு அவர் தலைமையை விரும்பி வருவோரை தலைமையை விரும்பி ஏற்போரை கூட்டணிக்கு அரவணைப்போம் – தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுதி!!

விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொண்டு அவர் தலைமையை விரும்பி வருவோரை தலைமையை விரும்பி ஏற்போரை கூட்டணிக்கு அரவணைப்போம் என்றும் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை விஜய்க்கு வழங்கியும் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற, இந்த கூட்டத்தில், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், பொருளாளர் வெங்கட்ராமன், பரப்புரைச் செயலாளர் நாஞ்சி சம்பத், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வரும் சட்டப்பேரவை தேர்தல் பணிகள், கூட்டணி, வீடு வீடாக தவெகவினர் மக்களின் ஆதரவு திரட்டுவது, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான பணிகள், விஜய்யின் அடுத்தடுத்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ஒரு சில மாவட்ட செயலாளர்கள் கட்சி பணிகளை சரிவர செய்வதில்லை. கட்சி பணிகளை சரிவர செய்யாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என தலைமை நிர்வாகிகள் ‘வார்னிங்’ கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், தேர்தல் வெற்றிக்கு மாவட்ட செயலாளர்களின் களப்பணி முக்கியமானது. அந்தவகையில், கட்சி பணிகளில் முழு வீச்சில் ஈடுபடாத மாவட்ட செயலாளர்களை கட்சி தலைமை விரைவில் மாற்ற இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், ‘ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும்.

அதற்காக தவெக தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமையை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம்.

மேலும் தவெக கூட்டணி குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்க, விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *