முது​மலை அரு​கே​யுள்ள மாவனல்​லா​வில் பெண்​ணைக் கொன்ற ஆண் புலி வனத் துறை​யினர் வைத்த கூண்​டில் சிக்​கியது!!

மசினகுடி: ​
முது​மலை அரு​கே​யுள்ள மாவனல்​லா​வில் பெண்​ணைக் கொன்ற ஆண் புலி வனத் துறை​யினர் வைத்த கூண்​டில் சிக்​கியது. நீல​கிரி மாவட்​டம் முது​மலை மசினகுடி வனக்​கோட்​டம் மாவனல்லா பகு​தி​யில் கடந்த மாதம் 24-ம் தேதி ஆடு மேய்த்​துக் கொண்​டிருந்த நாகி​யம்​மாள் (60) என்​பவரை புலி தாக்​கிக் கொன்​றது.

இதையடுத்​து, புலியைப் பிடிக்க வனத் துறை​யினர் 3 இடங்​களில் கூண்டு வைத்​து, கண்​காணித்து வந்​தனர். இந்​நிலை​யில், புலிக்கு வைக்​கப்​பட்ட கூண்​டில் கடந்த 3-ம் தேதி சிறுத்தை சிக்​கியது.

வன ஊழியர்​கள் அதே பகு​தி​யில் அதை விடு​வித்​தனர். கடந்த 8-ம் தேதி மாவனல்லா பகு​தி​யில் கன்​றுக் குட்​டியை புலி தாக்கி இழுத்​துச் சென்று கொன்​றது. மேலும், செம்​மனத்​தம் சாலையை ஒட்​டிய பகு​தி​யில் மேய்ச்​சலுக்கு விட்​டிருந்த மாட்டை புலி தாக்க முயற்​சித்​தது.

அதைப் பார்த்து மக்​கள் கூச்​சலிட்​ட​தால், புலி அங்​கிருந்து தப்பி ஓடியது. மாடு சிறு காயங்​களு​டன் உயிர் தப்​பியது. அப்​பகு​தி​யில் ஆய்வு மேற்​கொண்ட வனத் துறை​யினர், புலியைப் பிடிக்க மேலும் ஒரு கூண்டு வைத்​தனர்.

மேலும், பழங்​குடி​யின பெண்​ணைத் தாக்​கிய புலியை, அதன் உடல் வரி​களைக் கொண்டு அடை​யாளம் காணும் ஆய்​வு​களி​லும் ஈடு​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில், மாவனல்லா பகு​தி​யில் அமைத்​திருந்த கூண்​டுக்​குள் நேற்று அதி​காலை வயது முதிர்ந்த ஆண் புலி ஒன்று சிக்​கி​யிருப்​பதை வனத் துறை​யினர் உறுதி செய்​தனர்.

இந்​நிலை​யில், சிக்​கியது ஆட்​கொல்லி புலி​தானா என்று வனத் துறை அதி​காரி​கள் உறுதி செய்ய வேண்​டும் என்று வலி​யுறுத்தி அப்​பகுதி மக்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டது.

வேட்​டைத் திறன் இழப்​பால் கால்​நடைகளை​யும், பழங்​குடி பெண்​ணை​யும் இந்​தப் புலி தாக்​கி​யிருக்​கலாம் என சந்​தேகிக்​கும் வனத் துறை​யினர், அதன் உடல்​நிலை, வயது போன்​றவை குறித்து பரிசோதனை செய்​தனர்.

வனப் பகு​திக்​குள் வேட்​டை​யாடும் உடல் திறனை அந்த புலி இழந்​திருப்​பதை உறுதி செய்​த​தால், சென்னை வண்​டலூர் உயி​ரியல் பூங்​கா​வில் வைத்து பராமரிப்​ப​தற்​காக புலியை கொண்டு சென்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *