புதுச்சேரி:
புதுச்சேரியில் நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி மரத்தில் அவரது படத்தை வரைந்த ஓவியரின் முயற்சியை மக்கள் ரசித்தனர்.
ரஜினிகாந்த் பிறந்தநாளை பலரும் பலவிதமாக கொண்டாடினார்கள். புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த ஓவியர் குமார் வித்தியாசமாக ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடினார்.

அவர் தனது ஓவியத் திறமையால் அப்பகுதியில் உள்ள மரத்தில் 20 அடியில் ரஜினிகாந்தின் உருவப்படத்தை வரைந்து, சூப்பர்ஸ்டாருக்கு 75 பிளஸ் 50, வாழ்த்துக்கள் என வரைந்துள்ளார்.
ரஜினிகாந்தின் 75 வயதையும், அவர் 50 ஆண்டு திரைத்துறையில் உள்ளதையும் குறிப்பிடும் வகையில் அதில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதில் மரங்களை பாதுகாப்போம், மழை பெறுவோம் என்ற விழிப்புணர்வு வாசகத்தையும் எழுதி இருந்தார்.
அந்த வழியாக சென்ற பலரும் மரத்தின் அருகே நின்று செல்பி எடுத்தனர். மேலும் பலர் அந்த ஓவியத்தை ரசித்து பார்த்தனர்.