பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் நடிக்கும் ‘மெஜந்தா’ – முதல் தோற்றம் வெளியீடு!!

சென்னை:
பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் நடிக்கும் திரைப்படம் ‘மெஜந்தா’. படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் என்ற பகவதி பெருமாள், சரத் ரவி, அர்ச்சனா ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தரண் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்குப் பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதை, பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்குகின்றனர்.

“காதல், நகைச்சுவை கலந்த இது, ‘ஃபீல்- குட்’ படமாக உருவாகியுள்ளது. அவள் சூரிய உதயம், அவன் அந்தி சாயும் நேரம். இருவரும் ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள்.

பிரபஞ்சம் இவர்களை ஒரே புள்ளியில் இணைக்கும்போது என்ன நடக்கிறது என்பது ஒன் லைன். திரைக்கதை மட்டுமல்ல, விஷூவலாகவும் சிறப்பான படமாக இது இருக்கும்” என்றது படக்குழு. இந்நிலையில் இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *