மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் இன்று முதல் திருப்பாவை பாடப்படுகிறது. இதனையொட்டி இன்று முதல் மூலவர் ஏழுமலையானுக்கு வில்வ இலைகளால் சஹஸ்ர நாமார்ச்சனை செய்யப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி அலங்காரம் செய்யப்படுகிறது. வெல்லம் தோசை, சுண்டல், சீரகம் மற்றும் பொங்கல் போன்ற சிறப்பு பிரசாதங்கள் படைக்கப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) முதல் ஒரு மாதத்திற்கு சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70.251 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26,862 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.