அரசு அதி​காரி​களின் பணி​யிட மாற்​றத்​துக்கு ரூ.1 கோடி வரை லஞ்​சம் பெறப்​பட்​ட​தாக, அமைச்​சர் கே.என்​.நேரு மீது வழக்கு பதிவு செய்ய வலி​யுறுத்​தி, 3-வது முறை​யாக டிஜிபி-க்கு அமலாக்​கத்​ துறை கடிதம்!!

சென்னை:
அரசு அதி​காரி​களின் பணி​யிட மாற்​றத்​துக்கு ரூ.1 கோடி வரை லஞ்​சம் பெறப்​பட்​ட​தாக, அமைச்​சர் கே.என்​.நேரு மீது வழக்கு பதிவு செய்ய வலி​யுறுத்​தி, 3-வது முறை​யாக டிஜிபி-க்கு அமலாக்​கத்​ துறை கடிதம் அனுப்பி உள்​ளது.

கடந்த 2025-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் நடை​பெற்ற சோதனை​யில் சிக்​கிய ஆவணங்​களின் அடிப்​படை​யில், அக்​டோபரில் தமிழக டிஜிபிக்கு அமலாக்​கத்​துறை ஒரு கடிதத்தை அனுப்​பி​யிருந்​தது.

சுமார் ரூ.1,020 கோடி வரை முறை​கேடு நடந்​திருப்​ப​தாக​வும், இது தொடர்​பான 252 பக்க ஆதார ஆவணங்​கள், வாட்​ஸ்​-அப் உரை​யாடல்​கள் மற்​றும் ஹவாலா பரிவர்த்​தனை விவரங்​களை​யும் அமலாக்​கத் ​துறை சமர்ப்​பித்​திருந்​த​தாக கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில், தற்​போது நகராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி​யிட மாற்​றத்​துக்​காக அரசு அதி​காரி​களிடம் இருந்து ரூ.7 லட்​சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்​சம் பெறப்​பட்​ட​தாக புதிய புகாருடன் 100 பக்​கங்​கள் கொண்ட 3-வது கடிதத்தை டிஜிபிக்கு அமலாக்​கத் ​துறை அனுப்​பி​யுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

திமுக ஆட்​சி​யில், நகராட்சி நிர்​வாகத் ​துறை​யில் அரசு அதி​காரி​களின் பணி​யிட மாற்​றம் மற்​றும் பதவி நியமனங்​களுக்​காக ரூ.365.87 கோடி லஞ்​சம் வசூலிக்​கப்​பட்​டதற்​கான விரி​வான ஆவணங்​கள் அடங்​கி​யுள்​ள​தாக​வும், அரசு அதி​காரி​களிடம் இருந்து பெறப்​பட்ட லஞ்ச பணம் குறித்த பணப்​பரி​மாற்​றம் தொடர்​பான அனைத்து விவரங்​களும் அமலாக்​கத் ​துறைக்கு தெரி​யும் என்​றும், அதுதொடர்​பான ஆவணங்​களும் இந்த 100 பக்ககடிதத்​தில் இணைத்​திருப்​ப​தாக​வும் கடிதத்​தில், கூறப்​பட்​டிருப்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்ளது.

மேலும், இந்த தகவலும், ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற சோதனை​யில் கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் மூல​மாக கிடைத்​தது​தான் என்​றும், இதுதொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்த வேண்​டும் என்​றும் டிஜிபிக்கு அமலாக்​கத்​துறை வலி​யுறுத்​தி​யுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அமைச்​சர் நேரு இக்​குற்​றச்​சாட்​டு​களை மறுத்து வரும் சூழலில், அமலாக்​கத் ​துறை​யின் தொடர் நடவடிக்​கைகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்​படுத்​தியுள்​ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *