ஆளுநருடன் இணக்​க​மான போக்கை மாநில அரசு விரும்​ப​வில்லை – பாஜக எம்​எல்ஏ வானதி சீனி​வாசன் கருத்து!!

சென்னை:
ஆளுநருடன் இணக்​க​மான போக்கை மாநில அரசு விரும்​ப​வில்லை என பாஜக எம்​எல்ஏ வானதி சீனி​வாசன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக வெளிநடப்பு செய்​த​பின் சட்​டப்​பேரவை வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

கடந்த முறை போலவே ஆளுநரின் கோரிக்​கை​யான தேசிய கீதத்​தை, முன்​கூட்​டியே இசைக்க வேண்​டும் என்​பது இந்த முறை​யும் நிறை​வேற்​றப்​பட​வில்​லை.

தொடர்ந்து ஆளுநர் வெளி​யேறிய பின்​பு, அதற்​கான காரணத்​தை​யும் ஆளுநர் மாளிகை வெளி​யிட்​டிருக்​கிறது.

ஆளுநர் உரையை படிக்க மாட்​டார் என்ற முன் முடிவு​களு​டன் முதல்​வர் ஸ்டா​லின் தனது உரையை தயா​ரித்து வந்து படித்​திருக்​கி​றார்.

இதன்​மூலம் ஆளுநர் அவரது உரையை படிக்க வேண்​டும் என்​பது இவர்​களது எண்​ண​மாக இல்​லை.

சட்​டப்​பேர​வை​யில் ஆடியோவை துண்​டித்​து​விட்​டனர். மேலும் உள்ளே நடந்த விஷ​யத்தை வெளியே காட்​டக்​கூ​டாது எனவும் எச்​சரிக்கை விடுத்​திருக்​கின்​ற​னர்.

எனில் எந்த செய்​தி​யும் மக்​களுக்கு தெரியக்​கூ​டாது என அரசு நினைக்​கிறது. ஆளுநர் தொடர்​பான விஷ​யங்​களில் அரசு ஆதிக்க உணர்​வோடு நடந்து கொண்​டிருக்​கிறது.

அரசு வேண்​டுமென்றே மாநில அரசுக்​கும், ஆளுநருக்​கும் ஒரு மோதல் இருப்​பதை போல ஒரு உரு​வாக்​கத்தை கொடுக்க நினைக்​கி​றார்​கள். ஆளுநருடன் இணக்​க​மான போக்கு நில​வவேண்​டும் என்​பதை அரசு விரும்​ப​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதே​போல் பாமக எம்​எல்ஏ வெங்​கடேஸ்​வரன் கூறுகை​யில், “தமி​ழ​கத்​தில் கொலை, கொள்​ளை, போதை பொருட்​கள் புழக்​கம் என சட்​டம்- ஒழுங்கு கெட்​டு​விட்​டது.

இதை கண்​டித்து வெளிநடப்பு செய்​தோம். ஆளுநர் வெளி​யேறியதும் சரி​யான நடவடிக்கை தான்.” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *