பாஜக​வின் 12-வது தேசிய தலை​வ​ராக நிதின் நபின் பொறுப்பேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து!!

புதுடெல்லி:
பாஜக​வின் 12-வது தேசிய தலை​வ​ராக நிதின் நபின் நேற்று பொறுப்​பேற்​றார். கட்சி விவ​காரங்​களில் அவரே தனது தலை​வர் என அறி​வித்து பிரதமர் நரேந்​திர மோடி வாழ்த்து தெரிவித்​தார்.

பாஜக​வின் புதிய தேசிய தலை​வர் பதவிக்​கான தேர்​தல் டெல்​லி​யில் உள்ள கட்​சித் தலை​மையகத்​தில் நேற்று முன்​தினம் நடைபெற்​றது.

இதில் கட்​சி​யின் செயல் தலை​வர் நிதின் நபின் சார்​பில் மட்​டும் 37 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. அவர் போட்​டி​யின்றி ஒரு​மன​தாக தேர்ந்​தெடுக்​கப்​படு​வது உறு​தி​யானது. இந்​நிலை​யில் டெல்​லி​யில் உள்ள பாஜக தலைமையகத்தில் தேர்​தல் முடிவு​களை கட்​சி​யின் தேர்​தல் அதிகாரி கே.லட்​சுமன் நேற்று வெளி​யிட்​டார்.

இதில் பாஜக தேசிய தலை​வ​ராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்​ள​தாக அவர் முறைப்​படி அறி​வித்​தார்.

இதற்​கான சான்​றிதழை அவர் நிதின் நபினிடம் வழங்​கி​னார். 45 வயதாகும் நிதின் நபின், பாஜக தேசிய தலை​வர் பதவியை இளம் வயதில் அடைந்த முதல் தலை​வர் என்ற பெரு​மையை பெற்றுள்ளார்.

அவருக்கு சிஆர்​பிஎப் சார்​பில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்​கப்​படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: நம் அனை​வருக்​கும் இப்​போது நிதின் நபின் தலை​வர்.

அவருடைய பொறுப்பு பாஜகவை நிர்​வகிப்​பது மட்​டுமல்ல, என்​டிஏ கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு இடை​யில் ஒருங்​கிணைப்பை உறுதி செய்​வதும் ஆகும். கட்சி விவ​காரங்​களில் நிதின் நபின் எனது தலை​வர், நான் ஒரு தொண்​டர்.

அடல் பிஹாரி வாஜ்​பாய், லால் கிருஷ்ண அத்​வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் தலை​மை​யில், பாஜக பூஜ்ஜி​யத்​தில் இருந்து உச்​சி​க்கான பயணத்தை கண்​டது. இந்த நூற்​றாண்​டில், எம்​.வெங்​கய்ய நாயுடு, நிதின் கட்​கரி போன்ற தலை​வர்​கள், நமது மூத்த சகாக்​களு​டன் இணைந்து கட்​சியை விரிவுபடுத்​தினர். ராஜ்​நாத் சிங் தலை​மை​யில், முதல் முறை​யாக பாஜக தனிப் பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைத்​தது.

பிறகு அமித் ஷா தலை​மை​யில், பாஜக பல மாநிலங்​களில் அரசு அமைத்​ததுடன், மத்​தி​யில் தொடர்ந்து இரண்​டாவது முறை​யாக ஆட்​சிக்கு வந்​தது. ஜே.பி.நட்​டா​வின் தலை​மை​யில், பாஜக பஞ்​சா​யத்து முதல் நாடாளு​மன்​றம் வரை மேலும் வலுப்​பெற்​றது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

இதையடுத்து பாஜக​வின் 12-வது தேசிய தலை​வ​ராக நிதின் நபின் பொறுப்​பேற்​றுக் கொண்​டார். அப்​போது நிதின் நபினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்​திய அமைச்​சர்​கள் மற்​றும் பாஜக மூத்த தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர்.

இளைஞர்​கள் அரசி​யலுக்கு வர வேண்​டும்: பாஜக தலைவராக பதவியேற்ற நிதின் நபின் பேசி​ய​தாவது:

இந்​தி​யாவை வளர்ந்த நாடாக மாற்​றும் பிரதமர் நரேந்​திர மோடி​யின் லட்​சி​யத்தை நிறைவேற்​றிட மக்​கள், குறிப்​பாக இளைஞர்​கள் அரசி​யலில் நுழைய வேண்​டும். கட்​சி​யில் ஒவ்​வொரு​வரின் பணி​களை​யும் கவனிக்​கும் அளவுக்கு பாஜக​வின் கண்​காணிப்பு அமைப்பு வலிமை​யானது.

கட்​சித் தொண்​டர்​களின் பணி​களுக்கு உரிய அங்​கீ​காரம் வழங்கப்​படும். மக்​கள்​ தொகை மாற்​றங்​களில் இருந்து நாட்டை காக்​க​வும் சனாதன மரபு​கள், நம்​பிக்​கையை பாது​காக்​க​வும் மே.வங்​கம் உள்​ளிட்ட 5 மாநில தேர்​தல்​களில் பாஜக​வின் வெற்றியை தொண்​டர்​கள் உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *