சென்னை:
சென்னையில் மட்டும் 13 இடங்களில் நாய்களுக்கு கருத்தடை செய்ய மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில், அதிமுக உறுப்பினர் தங்கமணி பேசும் போது, “தெருநாய்கள் பிரச்சினை நீடித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுவதாக தொடர் செய்திகள் வெளிவருகின்றன.
தெருநாய் கடிக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்”என்று கோரிக்கை வைத்தார் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “நாய்க்கடி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.
ஒவ்வொரு பகுதியில் இருந்தும் நாய்களை கொண்டு வந்து கருத்தடை செய்து பிடித்த இடத்திலேயே விட வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் மட்டும் 13 இடங்களில் கருத்தடை செய்ய மருத்துவமனையை உருவாக்கி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.