மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்!!

மேஷம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.

ரிஷபம்

மனதில் நினைத்தது மறுநிமிடமே செயலாகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

மிதுனம்

வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அலுவலக பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

கடகம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறர் கொடுத்த வாக்கை நம்பி எதையும் செய்ய இயலாது. தொழில் தொடர்பாக எடுத்த முயற்சி தாமதப்படும்.

சிம்மம்

ஒவ்வாத உணவுகளை உட்கொண்டதன் மூலம் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.

கன்னி

சிக்கனத்தை கடைப்பிடித்து சிறப்படையும் நாள். சொந்த பந்தங்கள் தொடர்பான விஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். மருத்துவ செலவு உண்டு.

துலாம்

சேமிப்பு கரையும் நாள். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதியை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள்.

விருச்சிகம்

தொட்ட காரியங்கள் துளிர்விடும் நாள். புதிய வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். புகழ்மிக்கவர்களைச் சந்தித்து பேசும் வாய்ப்பு உண்டு.

தனுசு

வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். சகோதர வழியில் சுபச்செய்தி ஒன்று வந்து சேரும்.

மகரம்

உற்சாகத்தோடு செயல்படும் நாள். ஆன்மிக ஈடுபாடு மேலோங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறப்புகளின் உதவி உண்டு.

கும்பம்

விவாதங்களில் வெற்றி பெறும் நாள். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உறவினர்கள் வழியில் அன்புத் தொல்லை உண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *