புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால். இவர் ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இவர் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், 2018 காமன்வெல்த்தில் தங்கம் வென்றார்.
இந்நிலையில், பேட்மிண்டனில் இருந்து ஓய்வுபெற்ற சாய்னா நேவாலுக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, சச்சின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சாய்னா, நீங்கள் இந்திய பேட்மிண்டனை உலக அரங்கிற்கு கொண்டு சென்றீர்கள். பதக்கங்களையும் தாண்டி மிகப்பெரிய சாதனை ஒன்று உள்ளது.
அது, நாடு முழுவதும் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உலக அளவிலான வெற்றி சாத்தியம் என்ற நம்பிக்கையை கொடுத்து உத்வேகம் அளித்தீர்கள்.
இந்திய விளையாட்டுக்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி. உங்களது தாக்கம் தலைமுறைகள் கடந்து உணரப்படும் என பதிவிட்டுள்ளார்.