ராஷ்மிகா திருமணத்துக்கு நெதர்லாந்து ரோஜாக்கள்!!

சென்னை:
நடிகை ராஷ்மிகா மந்​தனா தெலுங்​கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து வரு​கிறார். இவரும் நடிகர் விஜய் தேவரகொண்​டா​வும் காதலித்து வந்​தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு அக்​டோபரில் நிச்​சய​தார்த்​தம் செய்​து​கொண்டனர். ஹைத​ரா​பாத்​தில் நடந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்​கிய உறவினர்​கள் மட்​டுமே கலந்​து​கொண்​டனர்.

இதுகுறித்து அவர்​கள் நேரடி​யாக அறிவிக்​க​வில்​லை. இவர்கள் திரு​மணம் அடுத்த மாதம் 22-ம் தேதி உதய்​பூரில் நடை​பெற இருப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. தங்​கள் காதல் பற்​றியோ, திரு​மணம் பற்றியோ இரு​வரும் அமைதி காத்து வரு​கின்​றனர்.

நடிகை ராஷ்மிகா சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில், “கடந்த 4 ஆண்​டு​களாக இந்த செய்தி ஓடிக்​கொண்டே இருக்​கிறது. அதை எப்​போது பேச வேண்​டுமோ அப்​போது பேசுவேன்” என்று தனது காதல் மற்​றும் திருமணம் பற்​றிக் கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் இவர்​கள் திரு​மணத்​துக்கு நெதர்​லாந்து நாட்​டிலிருந்து ரோஜா பூக்​களை இறக்​குமதி செய்ய இருக்​கின்​றனர். இதற்​கான ஆர்​டர் ஒரு மாதத்​துக்கு முன்பே செய்​யப்​பட்டு விட்​ட​தாகக்​ கூறப்​படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *