நந்​தனத்​தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் அலு​வலக வளாகத்​தில், விளை​யாட்டு மைதானங்​களு​டன் கூடிய மெட்ரோஸ் பூங்​காவை திறந்து வைத்​த உதயநிதி ஸ்டா​லின்!!

சென்னை:
நந்​தனத்​தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் அலு​வலக வளாகத்​தில், விளை​யாட்டு மைதானங்​களு​டன் கூடிய மெட்ரோஸ் பூங்​காவை, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் தலைமை அலுவல​கம் நந்​தனத்​தில் செயல்​பட்டு வரு​கிறது.

இந்த வளாகத்​தில் உள்ள மாநக​ராட்​சிக்கு சொந்​த​மான திறந்​தவெளி நிலத்​துடன், மெட்ரோ ரயில் நிறு​வனத்​துக்கு சொந்​த​மான நிலப்​பகு​தி​யை​யும் உள்​ளடக்கி மொத்​தம் 3,750 சதுரமீட்​டர் பரப்​பள​வில், ரூ.3.50 கோடி​யில் மெட்ரோஸ் பூங்கா மற்​றும் விளை​யாட்டு மைதானங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

காலை​யில் 5 மணி முதல் 9 மணி வரை​யிலும், மாலை​யில் 5 மணி முதல் இரவு 9 மணி வரை​யிலும் பூங்கா திறக்​கப்​படும்.

இந்த விளை​யாட்டு மைதானத்​தில் 3 பூப்​பந்து விளை​யாட்டு அரங்​கு​கள், 2 பிக்​கிள் பந்து திறந்​து​வெளி விளை​யாட்டு அரங்​கு​கள், திறந்​தவெளி உடற்​ப​யிற்சிக் கூடம் ஆகியவை நிறு​வப்​பட்​டுள்​ளன.

மெட்ரோஸ் பூங்​காவை சுற்றி 370 மீ நீளத்​தில் நடைபகு​தி, பிரத்​யேக 8 வடிவ நடைபகு​தி, சிறு​வர்​கள் விளை​யாட்டு பகு​தி, குடிநீர் மற்​றும் கழிப்​பறை வசதி​கள், உள் அமர்வு மற்​றும் வெளியரங்க அமர்வு பகு​தி​கள், வாக​னங்​கள் நிறுத்​து​மிடம் ஆகிய வசதி​களும் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

மேலும், பூங்​கா​வில் 20 மழை நீர் சேகரிப்பு அமைப்​பு​கள், பூங்​கா​வில் உரு​வாகும் இலை, தழைகளை மக்கி உரமாக்க 3 கம்​போஸ்ட் குழிகளும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

பூங்கா மற்​றும் விளை​யாட்டு அரங்​கு​களை பொது​மக்​கள் இடையூறுமின்றி பயன்​படுத்த ஏது​வாக, அண்​ணா​சாலை​யையொட்டி பிரத்​யேக நுழை​வா​யில் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மெட்ரோஸ் பூங்கா மற்​றும் விளை​யாட்டு மைதானங்​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​து, பார்​வை​யிட்​டார்.

இந்​நிகழ்​வில், மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் மு.மகேஷ்கு​மார், மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன், சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் எம்​.ஏ.சித்​திக், சிறப்பு முயற்​சிகள் துறை செயலர் கே.கோ​பால், எம்​எல்​ஏ த.வேலு உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *