பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக பெற்றோர்கள் பணத்தை சேமிப்பது அவசியம் – செல்வ மகள் சேமிப்பு திட்டம் – முழு விவரம்!!

பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு 2015ம் ஆண்டு தொடங்கியது.
கடந்த பத்தாண்டுகளாக இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டாலும் இன்னும் பலருக்கும் இந்த திட்டம் குறித்த பொது விவரங்கள் தெரியவில்லை. அதன் காரணமாகவே இந்த திட்டத்தில் இன்னும் எண்ணற்றோர் இணையாமல் உள்ளனர்.

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெற்றோர்கள் பணத்தை சேமிப்பது அவசியமாகும்.


செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம்.

21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும்.

இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, மாதா மாதம் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால் தோராயமான 8% வட்டி வருமானத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 60 லட்சம் கிடைக்கும்.

எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ கடைசியில் கிடைக்கும் தொகை மாறக்கூடும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *