மத்​திய பட்​ஜெட் குறித்து அரசி​யல் கட்​சிகள் வரவேற்​றும் விமர்​சித்​தும் கருத்து!!

சென்னை:
மத்​திய பட்​ஜெட் குறித்து அரசி​யல் கட்​சிகள் வரவேற்​றும் விமர்​சித்​தும் கருத்து தெரி​வித்​துள்​ளன. மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன்:

ஆதிச்​சநல்​லூரில் கலாச்​சார மையம், பொதிகை மலை​யேற்ற சுற்​றுலா திட்​டம் என பட்​ஜெட்​டில் தமிழகத்​துக்கு ஏராள​மான திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற லட்​சி​யத்தை அடைவதற்​கான உறு​தி​யான பாதையை வகுக்​கும் வகை​யிலும் பட்​ஜெட் அமைந்​துள்​ளது.

தமிழக நிதி அமைச்​சர் தங்​கம் தென்​னரசு: மத்​திய பட்​ஜெட் தமிழக மக்​களுக்கு பெரும் ஏமாற்​றத்தை அளித்​துள்​ளது.

மாநிலத்​தின் அடிப்​படை வளர்ச்​சிக்​கான தேவை​கள், வேலை​வாய்ப்​பு, கல்​வி, சுகா​தா​ரம், தொழில்​துறை முதலீடு போன்ற முக்​கிய துறை​களுக்கு தெளி​வான அறி​விப்​பு​கள் இல்​லை.

நாட்​டின் வளர்ச்​சிக்கு முக்​கியப் பங்​காற்​றும் தமிழகத்​துக்கு உரிய பங்​கீடு வழங்​கப்​பட​வில்​லை. இது தமிழ் மக்​களின் எதிர்​பார்ப்​பு​களை முற்​றி​லும் புறக்​கணித்த பட்​ஜெட்​டாகும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: சென்​னை- ஹைத​ரா​பாத்- பெங்​களூரு நகரங்​களை இணைத்து அதிவேக ரயில் வழித்​தடச் சேவையை அறி​வித்​துள்​ளதற்​காக தமிழக மக்​கள் சார்​பில் நெஞ்​சார்ந்த நன்​றிகள்.

பாமக தலை​வர் அன்​புமணி: தமிழகத்​துக்கு ஏராள​மான திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டிருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது.

அதே​நேரத்​தில் வரி வரு​வா​யில் 41 சதவீதம் மட்​டும் தான் மாநிலங்​களுக்கு பகிர்ந்து வழங்​கப்​படும் என்ற அறி​விப்பு ஏமாற்​றமளிக்​கிறது.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: அரிய வகை கனிமங்​கள் எடுக்க வழித்​தடம், அதிவேக ரயில் வழித்​தடம், பொதிகை மலை​யேற்ற சுற்​றுலா வழித்​தடம் ஆகியவை தமிழக பொருளா​தார வளர்ச்​சிக்கு பேருத​வி​யாக இருக்​கும்.

டிடிவி தினகரன் (அம​முக பொதுச் செய​லா​ளர்): பிரதமர் நரேந்​திர மோடி​யின் சீரிய தலை​மை​யில், இந்​தி​யா​வின் நிதி​நிலை அறிக்​கை​யைத் தொடர்ந்து 9வது ஆண்​டாக தாக்​கல் செய்​திருப்​ப​தோடு, அதிக முறை நிதி​நிலை அறிக்​கை​யைத் தாக்​கல் செய்த நிதி​யமைச்​சர்​களின் பட்​டியலில் இரண்​டாவது இடத்​திற்​கும் முன்​னேறி​யிருக்​கும் நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமனுக்கு எங்​களது மனமார்ந்த பாராட்​டுக்​களைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

வளர்ச்​சி​யடைந்த பாரதம் எனும் இந்​தி​யா​வின் இலக்கை எளி​தாக எட்​டிப்​பிடிப்​ப​தற்​கான அனைத்து அம்​சங்​களை​யும் உள்​ளடக்​கியதாக பட்ஜெட் அமைந்​திருப்​பது வரவேற்​புக்குரியது.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: ஆதிச்​சநல்​லூர் உட்பட நாட்​டின் 15 தொல்​லியல் இடங்​களை கலாச்​சார மையங்​களாக மேம்​படுத்​து​வதன் மூலம் இந்​தி​யா​வின் செழிப்​பான நாகரி​கத்தை உலகுக்கே நாம் பறை​சாற்ற முடி​யும்.

திமுக எம்​.பி. கனி​மொழி: தமிழகத்தின் அடிப்​படை வளங்​களை சுரண்​டும் பட்​ஜெட். தமிழக மக்​களுக்கு மிகப்​பெரிய அநீதி இழைக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​துக்​கான திட்​டங்​களும் இல்​லை, திருக்​குறளும் இல்​லை. தமிழகம், கேரளம், மேற்கு வங்​கம் ஆகிய மாநிலங்​கள் புறக்​கணிக்​கப்​பட்​டு உள்​ளன.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்பெருந்​தகை: விலை​வாசி உயர்வை கட்​டுப்​படுத்​து​வது, சிறு, குறு தொழில்​களுக்கு ஊக்​கம் அளிப்​பது தொடர்​பான எந்த அறி​விப்​பும் இல்​லை. உருப்​படி​யான திட்​டங்​கள், நிதி ஒதுக்​கீடு இல்​லாத மக்​கள் விரோத பட்​ஜெட்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: விவ​சா​யிகள், அடித்​தட்டு உழைக்​கும் மக்​களின் நலன்​கள் புறக்​கணிக்​கப்​பட்​டு, பெருநிறு​வனங்​களுக்கு சாதக​மான பட்​ஜெட்​டாக ஏமாற்​றம் அளிக்​கிறது.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்: இந்த பட்​ஜெட், எரி​யும் பொருளா​தார பிரச்​னை​கள் எதற்​குமே தீர்வு காண்​ப​தாக அமைய​வில்​லை.

எளிய நடுத்தர மக்​களின் நலனுக்​கோ, சிறு தொழில்​களை நெருக்​கடியி​லிருந்து மீட்​கவோ, கிராமப்​புற மக்​களின் மேம்​பாட்​டிற்கோ இந்த நிதி​நிலை அறிக்கை உருப்​படி​யான முன்​மொழி​வு​கள் எதை​யும் உள்​ளடக்​கிய​தாக இல்​லை.

எந்த வகை​யிலும் தேசத்​தின் நலனுக்​கோ, மக்​களின் வாழ்​வுக்​கோ, தமிழகத்​தின் உரிமைக்கோ உதவாத இந்த பட்​ஜெட்டை மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி வன்​மை​யாக கண்​டிக்​கிறது.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: கோவை, மதுரை, திருச்சி உள்​ளிட்ட நகரங்​களுக்கு மெட்ரோ ரயில் திட்​டம் பற்​றிய அறி​விப்​பும் இல்​லை. நிலு​வை​யில் உள்ள ரயில்வே திட்​டங்​களுக்கு போதிய நிதி ஒதுக்​கீடும் இல்​லை.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: தமிழகத்​துக்கு எந்​தவொரு பெரிய திட்​ட​மும் இல்​லை. தேர்​தலுக்​காகக்​கூட எந்த அறி​விப்​பும் இல்​லை. தமிழகத்​துக்​குள்​ளாக எந்த ரயில்வே திட்​ட​மும் இல்​லை.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா: நதி​கள் இணைப்​பு, பெட்​ரோல், டீசல் விலை குறைப்​பு, தங்​கம்- வெள்ளி விலையை கட்​டுப்​படுத்​து​வதற்​கான அறி​விப்போ இல்​லை.

மநீம கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன்: ‘பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசி​யக் கொஞ்​சம் மறந்​திருப்​போம். பாரதத்​தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்​பி’ என கவிஞர் கண்​ண​தாசன் பாடி​யிருப்​பார். எந்த பட்​ஜெட் என்​றாலும் இந்த வரி​கள் பொருந்​தும் போலிருக்​கிறது.

தமிழக பாஜக நிர்​வாகி ஆர்​.சரத்​கு​மார்: மத்​திய பட்​ஜெட், தொலைநோக்கு செயல்​திட்​டத்​துடன் இந்​தி​யா​வின் சுய​சார்பை ஊக்​கு​வித்​து, ஏற்​றுமதி – இறக்​குமதி துறை​களில் நிலைத்​தன்​மையை உரு​வாக்​கி, பொருளா​தார முன்​னேற்​றத்​தில் இந்​தி​யாவை முதன்மை நிலைக்கு கொண்டு செல்​லும் சிறப்​பான அறி​விப்​பு​களைக் கொண்​ட​தாக அமைந்​துள்​ளது.

தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்கப் பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன்: நெல், கோது​மை, கரும்பு உள்​ளிட்ட பெரு​மளவு விவ​சா​யிகள் சாகுபடி செய்​யக்​கூடிய பயிர்​களை ஊக்​கப்​படுத்​து​வதற்​கான எந்த ஒரு அடிப்​படைத் திட்​டத்​துக்​கும் நிதி ஆதா​ரம் ஒதுக்​கப்​பட​வில்​லை.

மனித நேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி: இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு தேவையான உரிய திட்டங்கள் ஏதுவும் இல்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்: எதிர்பார்த்த வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாமல் வரவு, செலவு கணக்குகள் போல சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.

கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டிருக்கிற தங்கம்,வெள்ளி விலையை குறைக்க நடவடிக்கை இல்லை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *