தேர்தல் தேதி அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டாலும், திட்​ட​மிட்​டபடி திருச்​சி​யில் மார்ச் 8-ம் தேதி திமுக மாநில மாநாடு நடை​பெறும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்!!

திருச்சி:
தேர்தல் தேதி அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டாலும், திட்​ட​மிட்​டபடி திருச்​சி​யில் மார்ச் 8-ம் தேதி திமுக மாநில மாநாடு நடை​பெறும் என்று அமைச்​சர் கே.என்​.நேரு கூறி​னார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி ‘ஸ்​டா​லின் தொடரட்​டும், தமிழ்​நாடு வெல்​லட்​டும்’ என்ற தலைப்​பில் மார்ச் 8-ம் தேதி திருச்​சி​யில் திமுக மாநில மாநாடு பிரம்​மாண்​ட​மான முறை​யில் நடை​பெற உள்​ளது.

திருச்சி சிறுக​னூரில் 2021-ல் திமுக மாநாடு நடை​பெற்ற இடமே தற்​போதைய மாநாட்​டுக்​கும் தேர்வு செய்​யப்​பட்​டு, அங்கு பந்​தல்​கால் நடும் நிகழ்வு நேற்று நடை​பெற்​றது.

திமுக முதன்​மைச் செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான கே.என்​. நேரு தலைமை வகித்​தார். அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி முன்​னிலை வகித்​தார்.

திமுக மாவட்​டச் செய​லா​ளர்​கள் வைரமணி, எம்​எல்ஏ தியாக​ராஜன், மாநகரச் செய​லா​ளர்​கள் மு.அன்​பழகன், மு.ம​தி​வாணன் மற்​றும் எம்​எல்​ஏக்​கள் சவுந்​திர​பாண்​டியன், பழனி​யாண்​டி, ஸ்டா​லின்​கு​மார், கதிர​வன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கே.என்​.நேரு கூறிய​தாவது: திருச்​சி​யில் மார்ச் 8-ம் தேதி நடை​பெற உள்ள திமுக மாநில மாநாடு, இதற்கு முன்பு நடை​பெற்ற மாநாடு​களை​விட சிறப்​பாக இருக்​கும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்பட உள்​ளன.

300 ஏக்​கர் வாகன நிறுத்​து​மிடம் உட்பட 500 ஏக்​கர் பரப்​பள​வில் மாநாடு நடை​பெற உள்​ளது. இந்த மாநாட்​டில் 10 லட்​சம் பேர் கலந்​து​கொள்​வார்​கள்.

ஒரு​வேளை தேர்தல் தேதி அறி​விப்பு வந்​தா​லும், திட்​ட​மிட்​டபடி மாநாடு நடை​பெறும். அப்​போது, மாநாடு தொடர்​பான செல​வு​கள் தலை​மைக் கழகத்​தின் சார்​பில் மேற்​கொள்​ளப்​பட்​டு, தேர்தல் ஆணை​யத்​திடம் சமர்ப்​பிக்​கப்​படும்.

திருச்​சியை 2-வது தலைநக​ராக்க வேண்​டும் என்ற எங்​களது கோரிக்​கையை தேர்தல் அறிக்கை கருத்​துக் கேட்​புக் குழு​விடம் தெரி​வித்​துள்​ளோம். கட்​சித் தலைமை நிதி நிலை​மைக்கு ஏற்ப அதுகுறித்து முடிவு செய்​யும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

பின்​னர், தஞ்​சாவூரில் கே.என்​.நேரு செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “ஆறு மாதங்​களுக்கு முன்பே திமுக தேர்தல் பரப்​புரையை தொடங்​கி​விட்​டது.

30 ஆண்​டு​கால​மாக தீர்க்க முடி​யாத பிரச்​சினை​கள் அனைத்​தை​யும் முதல்​வர் தீர்த்து வைத்​துள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் புதி​தாக சேரு​வது யார் என்​பது குறித்து முதல்​வர் தான் இறுதி முடிவு செய்​வார்.

தமிழக முதல்​வர் கூட்​டணி கட்​சிகளை நல்​லபடி​யாக வைத்​துள்​ளார். திமுக கூட்​டணி மிக​வும் பலம் வாய்ந்​த​தாக உள்​ள​தால் திமுக வெற்றி பெற்று மீண்​டும் ஆட்சி அமைக்​கும்” என்​றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *