சென்னை:
ராஜ்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘கர’ படத்தினை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனை வுண்டர்பார் ஸ்டூடியோஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதன் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இப்படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீலீலா. அவர் நடிக்கவுள்ள 2-வது படமாக இது அமைந்துள்ளது. ஸ்ரீலீலா தவிர்த்து சாய் பல்லவியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு இறுதியில் இப்படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.