உலகக் கோப்பை கிரிக்கெட் ; இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் ரத்தானால் ரூ.4,500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்!!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே இந்தியா- பாகிஸ்தான் ஆட்டங்கள் தான் பெரும் வருவாயை ஈட்டி தருகின்றன. இரு நாட்டு பகைமை உணர்வு ஆட்டத்திலும் எதிரொலிப்பதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்த போட்டியை காண தவம் கிடப்பார்கள்.

அந்த வகையில் விரைவில் தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் தான் உச்சபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

இந்த ஆட்டத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,500 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய், டிக்கெட் விற்பனை, இதர வர்த்தக நடவடிக்கைகள், அதிகாரபூர்வ பெட்டிங் ஆகியவையும் அடங்கும். வேறு எந்த தனிப்பட்ட ஆட்டத்துக்கும் இந்த அளவுக்கு வருவாய் மதிப்பு கிடையாது.

ஒருவேளை இந்த ஆட்டம் ரத்தானால் முதலில் பாதிக்கப்படுவது ஒளிபரப்பு நிறுவனம் தான். இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது 10 வினாடிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.40 வரை விளம்பர கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே இந்த ஆட்டம் நடக்காவிட்டால் விளம்பர வருவாயில் மட்டும் ரூ.250 முதல் ரூ.300 கோடி வரை ‘வெட்டு’ விழும். அதை ஈடுகட்ட ஐ.சி.சி.யிடம் ஒளிபரப்பு நிறுவனம் நிச்சயம் இழப்பீடு கோரும்.


ஐ.சி.சி,.க்கு வரும் வருவாயில் பெரும் பகுதி இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த வருவாய் குறைந்தால், ஐ.சி.சி. உறுப்பு நாடுகளுக்கு பிரித்து வழங்கும் நிதியின் அளவும் கணிசமாக குறைந்து விடும்.

இதனால் ஐ.சி.சி. நிதிைய மட்டுமே நம்பி இருக்கும் சிறிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

மேலும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு தலா ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும்.

இந்திய கிரிக்கெட் வாரியம் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால் இந்த இழப்பை சமாளித்து விடும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடங்கும் அபாயம் உள்ளது.

அத்துடன் ஐ.சி.சி.யின் மொத்த வருவாயில் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 5.75 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.

இது ஆண்டுக்கு ரூ.315 கோடியாகும். ஒப்பந்த விதியை மீறி உலகக் கோப்பை ஆட்டத்தை புறக்கணித்தால், ஐ.சி.சி. இந்த நிதியை நிறுத்தி வைப்பதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *