சென்னை:
பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா(68), பக்கவாத பாதிப்புக்காக ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்குச் சென்று ஹெச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, மருத்துவமனையில் ஹெச்.ராஜாவை நேற்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.