யு-19 உலகக் கோப்பை இறு​திப் போட்டியில் இந்திய அணி!

ஹராரே:
ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நேற்று இந்​தியா – ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதின.

ஜிம்​பாப்​வே​யின் ஹராரே நகரில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஆப்​கானிஸ்​தான் 50 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 310 ரன்​கள் குவித்​தது.

பைசல் ஷினோ​சாடா 93 பந்​துகளில், 15 பவுண்​டரி​களு​டன் 110 ரன்​களும் உசைருல்லா நியாசி 86 பந்​துகளில், 2 சிக்ஸர்கள், 12 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​களும் விளாசினர்.

இந்திய அணி தரப்​பில் தீபேஷ் தேவேந்​திரன், கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்பற்​றினர்.

311 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த யு-19 இந்​திய அணி 41.1 ஓவர்​களில் 3 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்றது.

தொடக்க வீர​ரான ஆரோன் ஜார்ஜ் 104 பந்துகளில், 2 சிக்​ஸர்​கள், 15 பவுண்​டரி​களு​டன் 115 ரன்​கள் விளாசி​னார்.

மற்​றொரு தொடக்க வீர​ரான வைபவ் சூர்​ய​வன்ஷி 33 பந்துகளில், 4 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 68 ரன்​களும், கேப்​டன் ஆயுஷ் மாத்ரே 59 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 62 ரன்​களும் சேர்த்​தனர். விஹான் மல்ஹோத்ரா 38, தேதாந்த் திரிவேதி 5 ரன்​கள் எடுத்​தனர்.

7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி இறுதிப் போட்​டிக்கு முன்​னேறியது. சாம்​பியன் பட்டத்தை வெல்வது யார் என்​பதை தீர்​மானிக்​கும் இறுதிப் போட்​டி​யில் இந்திய அணி நாளை (6-ம் தேதி) இங்கிலாந்து அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்துகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *