மும்பை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நேற்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது.
மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 20 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசினார்.
அபிஷேக் சர்மா 18 பந்துகளில், 24 ரன்களும் திலக் வர்மா 19 பந்துகளில், 45 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்களும் அக்சர் படேல் 23 பந்துகளில் 35 ரன்களும் ஹர்திக் பாண்டியா 10 பந்துகளில், 30 ரன்களும் ரிங்கு சிங் 13 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்தனர்.