சஞ்சு ​சாம்சன்​ அதிரடிக்காக கடை ஊழியர்களுக்​கு​ தனது இரண்​டு துணி​க்​கடைகளில்​ பணிபுரி​யும்​ 82 ஊழியர்க ளுக்​கும்​ தலா ரூ.2 ஆ​யிரம்​ பரிசு வழங்​கு​வ​தாக அறி​வித்​த கேரள தொழிலதிபர்​!!

கொச்​சி:
ஐசிசி டி20 உலகக்​ கோப்​பை தொடரின்​ இறு​திப்​ ​போட்​டி​யில்​ நேற்​று ​முன்​தினம்​ நியூஸிலாந்​து அணி​யை 96 ரன்​கள்​ ​வித்​தி​யாசத்​தில்​ வீழ்​த்​தி இந்​தி​ய அணி ​சாம்​பியன்​ பட்​டம்​ வென்​று ​சாதனை படைத்​தது.

இந்​தி​ய அணி​யின்​ தொடக்​க வீர​ரான சஞ்சு ​சாம்சன்​ 46 பந்​துகளில்​ 89 ரன்​கள்​ ​விளாசி அசத்​தி​னார்​.

இந்​நிலை​யில்​ கேரள ​மாநிலம்​ கோட்​டயத்​தை சேர்​ந்​த ஆடை தொழில​திப​ரான நித்​தின்​ ​பாபு என்​பவர்​, சஞ்​சு ​சாம்சனின்​ ஆட்​டத்​தால்​ உற்​சாகம்​ அடைந்​ததுடன்​ அதனை ​வித்​தி​யாச​மான ​முறை​யில்​ ​கொண்​டாடி உள்ளார். அவரது உற்​சாகம்​ ​விரை​வில்​ ​தா​ராள மனப்பான்மை​யின்​ செயலாக ​மாறியது.

தனது இரண்​டு துணி​க்​கடைகளில்​ பணிபுரி​யும்​ 82 ஊழியர்களுக்​கும்​ தலா ரூ.2 ஆ​யிரம்​ பரிசு வழங்​கு​வ​தாக அறி​வித்​தா​ர்​. இந்​த வகை​யில்​ அவர்​, மொத்​தம்​ ரூ.1.64 லட்சம்​ வழங்​கி உள்​ளார்​.

சஞ்​சு ​சாம்​சன்​ சூப்​பர்​ 8 சுற்​றில்​ மேற்​கு இந்​தி​யத்​ தீவுகளுக்​கு எ​தி​ராக 97 ரன்​கள்​ ​விளாசி​ய ​போது நித்தின்​ ​பாபு தனது ஊழியர்​கள்​ 62 பேருக்​கு தலா ரூ.500 வழங்​கி உள்​ளார்​.

மேலும்​ அரை இறு​தி​யில்​ இங்கிலாந்துக்கு எ​தி​ராக ​சாம்சன்​ 89 ரன்​கள்​ அடித்​த போது தனது ஊழியர்​கள்​ 62 பேருக்கு தலா ரூ.1,000​ என ரூ.62 ஆயிரம் வழங்கி உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *