ஹராரே:
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்து அசத்தியது.
தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே 53 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பென் டாக்கின்ஸ் 66 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.
சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்னாள், இந்நாள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.