ஐ.பி.எல். விதிமுறைகளை மீறியதாக கூறி குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் !!

ஐதராபாத்:
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 152 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 153 ரன் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் 16.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் ஐ.பி.எல். விதிமுறைகளை மீறியதாக கூறி குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் என்ன தவறு செய்தார் என்ற விவரம் வெளியாகாத நிலையில், விதி 2.2ன் கீழ் கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள், மைதான உபகரணங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *