சேலத்தில் வரும் 13-ம் தேதி சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம்!!

சேலம்;
சேலத்தில் வரும் 13-ம் தேதி சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மைதானத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடத்த போலீஸார் நேற்று அனுமதி வழங்கினர்.

இதுகுறித்து தவெக மாநகர் மாவட்ட செயலாளர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், கால அவகாசம் இல்லாததால் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கேட்கப்பட்டது.

தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் 5,000 பேர் பங்கேற்ற காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதில் விஜய் கலந்து கொள்கிறார்.

அதிக கூட்டம் கூடாமல் விஜய்யின் பேச்சை பொதுமக்கள் தொலைக்காட்சியில் பாருங்கள்.

காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து கூட்டம் நடைபெறும் இடத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே வர வேண்டும். அனுமதி இல்லாதவர்கள் வரவேண்டாம்.

51 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக உள்ளது.

மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *