கடந்த 5 ஆண்​டு​களில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்​கப்​பட்டு அவர்​களுக்கு ரூ.2.56 கோடி நிவாரணத்​தொகை – அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!!

சென்னை:
கடந்த 5 ஆண்​டு​களில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்​கப்​பட்டு அவர்​களுக்கு ரூ.2.56 கோடி நிவாரணத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் சி.​வி.கணேசன் கூறி​னார்.

கொத்தடிமைத் தொழிலா​ளர் முறையை முற்​றி​லும் ஒழிக்​க​வும், தமிழகத்தை கொத்​தடிமை தொழிலா​ளர் இல்​லாத மாநில​மாக உரு​வாக்​க​வும், மாநில அளவி​லான கொத்​தடிமைத் தொழிலா​ளர் முறை ஒழிப்பு தின விழிப்​புணர்​வுக் கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடந்​தது.

இதில், தொழிலா​ளார் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் சி.​வி. கணேசன் கலந்​துகொண்டு கொத்​தடிமை தொழிலா​ளர் முறை ஒழிப்பு தின விழிப்​புணர்வு கையெழுத்து இயக்​கத்தை தொடங்கி வைத்​தார்.

பின்​னர் அமைச்​சர் முன்​னிலை​யில் அரசு அதி​காரி​கள் கொத்​தடிமைத் தொழிலா​ளர் முறை ஒழிப்பு தின உறு​தி​மொழி ஏற்​றனர். தொடர்ந்து அமைச்​சர் கணேசன் பேசி​ய​தாவது:

கடந்த 5 ஆண்​டு​களில், 944 கொத்​தடிமை தொழிலாளர்கள் மீட்​கப்​பட்டு அவர்​களுக்கு உடனடி நிவாரணத் தொகை​யாக ரூ.2.56 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், மீட்​கப்​பட்ட கொத்​தடிமைத் தொழிலா​ளர்​களின் வாழ்​வா​தா​ரத்தை உறு​திப்​படுத்​தும் நோக்​கில், பல்​வேறு துறை​களின் வாயி​லாக நலத்​திட்ட உதவி​களும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. அவர்​களின் மறு​வாழ்​வுக்​கான நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

2030-ம் ஆண்​டுக்​குள் தமிழகத்தை கொத்​தடிமைத் தொழிலா​ளர் இல்​லாத மாநில​மாக உரு​வாக்க வேண்​டும் என்ற நோக்​கத்தை நிறைவேற்​றும் வகை​யில் அனை​வரும் பாடுபட வேண்​டும். இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார்.

கொத்​தடிமை முறையி​லிருந்து மீட்​கப்​பட்ட தொழிலாளர்கள் தங்​கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்​டனர்.

கொத்​தடிமைத் தொழிலா​ளர் முறை ஒழிப்​பில் சிறப்​பாக பணி​யாற்​றிய சார்​-ஆட்​சி​யர்​கள் மற்​றும் கோட்​டாட்​சி​யர்​களுக்கு கேடய​மும், பாராட்​டுச் சான்​றிதழ்​களும் வழங்​கப்​பட்​டன.

இந்த கூட்​டத்​தில், தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத் துறை செயலர் வீரராகவ ராவ், தொழிலா​ளர் ஆணை​யர் சி.அ.​ராமன், தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார இயக்​குநர் செ.ஆனந்த், கூடு​தல் தொழிலா​ளர் ஆணை​யர்​கள், இணை ஆணை​யர்​கள்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *