T20 WC 2026: சேப்பாக்கத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதல்!!

சென்னை:
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள நியூஸிலாந்து – ஐக்​கிய அரபு அமீரக அணி​கள் மோதுகின்​றன.

மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்​டத்​தில் இதே மைதானத்​தில் ஆப்கானிஸ்​தான் அணியை 5 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் வீழ்த்​தி​யிருந்​தது.

அந்த ஆட்​டத்​தில் 183 ரன்​கள் இலக்கை துரத்​திய நியூஸிலாந்து அணி 13 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்​டிருந்​தது.

14 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் டிம் ஷெய்​பர்ட் 65 ரன்​களும், கிளென் பிலிப்ஸ் 42 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்திருந்தனர்.

இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்​படக்​கூடும். அதேவேளை​யில் ஃபின் ஆலன், ரச்​சின் ரவீந்​திரா ஆகியோர் பார்​முக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

ஐக்​கிய அரபு அமீரக அணி​யில், கேப்​டன் முகமது வசீம், அதிரடி ஆட்​டக்​காரர் அலிஷான் ஷரஃபு மற்​றும் அனுபவ​மிக்க வேகப்​பந்து வீச்​சாளர் ஜுனைத் சித்​திக் போன்ற சில அனுபவ​மிக்க வீரர்​கள் பலம் சேர்ப்​பவர்​களாக உள்​ளனர். இதில் முகமது வசீம் சர்​வ​தேச டி 20 அரங்​கில் 84 போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்தவர்.

விசிலுக்கு அனு​மதி இல்லை

டி20 உலகக் கோப்பை தொடரில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நியூஸிலாந்து – ஆப்கானிஸ்​தான் மோதின.

இந்த போட்​டியைகாண வந்த ரசிகர்​களை மைதானத்​தின் நுழைவு வாயில்களில் சோதனை செய்த காவல் துறை​யினர் மைதானத்​துக்கு உள்ளே விசில்​களைகொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

இது ரசிகர்​கள் மத்​தி​யில் விவாதப் பொருளானது. இது ஒருபுறம் இருக்க மைதானத்​துக்​குள் விசிலை கொண்டு செல்​வதற்கு ஐசிசி மற்​றும் பிசிசிஐ எந்​த​வித தடை​யும் விதிக்​க​வில்லை என தெளிவுபடு​த்தப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் சேப்​பாக்​கத்​தில் இன்று நடை​பெறும் போட்டியை காண வரும் ரசிகர்​கள் மைதானத்​துக்​குள் விசில் கொண்டு செல்ல தடை செய்​யப்​பட்​டுள்​ள​தாக அதிகாரப்​பூர்​வ​மாக போட்டி அமைப்​பாளர்​கள் அறி​வித்துள்​ளனர்.

ரசிகர்​கள் மைதானத்​துக்​குள் கொண்​டு​வரக்​கூ​டாத பொருட்கள் என போட்டி அமைப்​பாளர்​கள் வெளி​யிட்​டுள்​ள பட்​டிய லில்​ விசில், கொடி, அரசியல் விளம்பரம்​ உள்ளிட்டவை​ இடம் பெற்​றுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *