சென்னை;
மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் வழக்கமான ஒரு செக்கப் செய்வதற்குகூட அதிக அளவு பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு தரும்விதமாக மத்திய அரசு 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஒருவருடைய வருமானத்தை கருத்தில் கொள்ளாமல் இந்த திட்டமானது அனைவருக்கும் நன்மை அளிக்கிறது.
இந்தத் திட்டத்தில் 5 லட்ச ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கிறது. 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டமானது இந்தியா முழுவதும் உள்ள 6 கோடிக்கும் அதிகமான 70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதிலான சீனியர் சிட்டிசன்களுக்கு மருத்துவ காப்பீட்டு நன்மைகளை வழங்கி வருகிறது.
70 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய ஆதார் கார்டை பயன்படுத்தி இந்த மருத்துவ அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 24,000 மேற்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையைப் பெறுவதற்கான வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்
·முதலில் www.pmjay.gov.in என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு செல்லுங்கள்.
·இப்போது புதிய சீனியர் சிட்டிசன் பதிவு செயல்முறைக்கான ஒரு பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.
·விண்ணப்பிக்கும் நபரிடம் ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருக்கும் பட்சத்தில் அவர் வெப்சைட் மூலமாக முக சரிபார்ப்பு முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
·இல்லையெனில், ஆதார் அடிப்படையில் நிறைவு செய்வதற்கு பொது சேவை மையம், PM-JAY கியாஸ்க் அல்லது இந்தத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நீங்கள் நேரடியாக செல்லலாம்.
·இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உங்களிடம் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை போன்றவற்றை வைத்திருப்பது கட்டாயம்.
·உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் ஆயுஷ்மான் பாரத் கார்டு ஒன்று உங்களுக்கு வழங்கப்படும். அதில் தனித்துவமான அடையாள எண் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த கார்டு மிகவும் முக்கியமானது. இந்த திட்டத்தின் கீழ் பணமில்லா சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.
மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
விண்ணப்பிப்பதற்கு முன்பு ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகல் மற்றும் பிற டாக்குமெண்ட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
·உங்கள் பகுதியில் உள்ள மருத்துவமனை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
·சில தனியார் மருத்துவமனைகள் கூட இந்த திட்டத்தின் கீழ் இயங்குகிறது.
·இதற்கான பட்டியல் PM-JAY வெப்சைட்டில் கிடைக்கிறது.
·ஏதாவது உதவி தேவைப்பட்டால் 14555 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு நீங்கள் அழைக்கலாம்.