பவுனுக்கு ரூ.1,600 என குறைந்தது தங்கம் விலை!!

சென்னை:
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.13) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.1,600 என குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 என விலை சரிந்தது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (பிப்.13) காலை சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,400-க்கு விற்​பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,15,200-க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல 24 காரட் சுத்த தங்​கம் பவுனுக்கு ரூ.1,752 என குறைந்து, ஒரு பவுன் ரூ.1,25,672-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்​கம் பவுனுக்கு ரூ.1,600 என குறைந்து, ஒரு பவுன் ரூ.99,200-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று கிரா​முக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.280-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,80,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.259 என விலை குறைந்து ஒரு கிராம் ரூ.5,914-க்கு விற்பனையாகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *