தற்​காலிக முறை​யில் செவிலியர்கள் நியமிக்​கப்​படு​வதைக் கண்​டித்​து, வரும் 28-ம் தேதி முதல் செவிலி யர்கள் போராட்டம்!!

சென்னை:
தற்​காலிக முறை​யில் செவிலியர்கள் நியமிக்​கப்​படு​வதைக் கண்​டித்​து, வரும் 28-ம் தேதி முதல் தொடர் போராட்​டத்தை செவிலியர்​கள் அறி​வித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக தமிழ்​நாடு செவிலியர்​கள் மேம்​பாட்​டுச் சங்​கத்​தின் செயலர் சுபின் கூறிய​தாவது:

புதிய செவிலியர் மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்ட ரூ.270 கோடி உட்பட பல்​வேறு பணி​களுக்​கான நிதியை தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​துவ பல்​கலைக்​கழகம்​தான் திரட்ட வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அப்​படி​யென்​றால், அதற்கு நியமிக்​கப்​படும் பணி​யிடங்​களுக்​கும் தற்​காலிக முறை​யில்​தான் இருக்​கும் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. தற்​போது, 4,724 செவிலியர்​கள் தற்​காலிக முறை​யில் நியமிக்​கப்பட உள்​ளனர்.

ஒப்​பந்த பணி​யாளர்​கள் 5 ஆண்​டு​களுக்​குள் பணி நிரந்​தரம் செய்​யப்​படு​வர் என்று தேர்​தலின் போது தவெக அரசு வாக்​குறுதி அளித்​திருந்​தது.

தற்​போது அனைத்து பணி​யை​யும் ஒப்​பந்​தம் மற்​றும் தற்​காலிக முறை​யில் நியமித்து வரு​கிறது.

இதனைக் கண்​டித்​தும், நிரந்தர அடிப்​படை​யில் பணி நியமனத்தை வலி​யுறுத்தி வரும் 28, 29-ம் தேதி​களில் கோரிக்கை அட்டை அணிந்து பணி​யாற்ற இருக்​கிறோம்.

சென்னை சிவானந்தா சாலை​யில் அடை​யாள உண்​ணா​விரதப் போ​ராட்​டம் 30-ம் தேதி நடை​பெறும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *