மக்கள் நலத்​திட்​டங்​களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வரு​வாய்​களை பெருக்​கு​வதுடன், பொருளா​தார வளர்ச்​சியை தக்க வைக்க வேண்​டும் – முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை:
‘மக்கள் நலத்​திட்​டங்​களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வரு​வாய்​களை பெருக்​கு​வதுடன், பொருளா​தார வளர்ச்​சியை தக்க வைக்க வேண்​டும்’ என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்​தி​யுள்​ளார்.

‘டிஎன்​பிஎஸ்​சி, ஆசிரியர் தேர்வு வாரி​யம் மற்​றும் மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூலம் அரசு பணிக்​கும் ஆசிரியர் பணிக்​கும் தேர்​வுசெய்​யப்​பட்​டுள்ள 9,801 பேருக்கு பணிநிய மன ஆணை வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பணிநியமன ஆணை​களை வழங்கி முதல்வர் பேசி​ய​தாவது: பல தடைகளை, சூழ்ச்​சிகளை முறியடித்து 1. 31 கோடி சகோ​தரி​களுக்கு சிறப்பு தொகுப்​பாக ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

அனை​வருக்​கு​மான முதல்​வ​ராக இருந்து தமிழகத்தை தொடர்ந்து நம்​பர் ஒன் மாநில​மாக உயர்த்​தும் பொறுப்​புணர்வு கூடி​யிருக்​கிறது. நமது நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கே எடுத்​துக்​காட்​டாக இருக்க வேண்​டும்.

மக்​கள் நலத்​திட்​டங்​களை தொடர்ந்து நிறைவேற்ற, அரசின் வரு​வாய்​களை பெருக்க வேண்​டும். பொருளா​தார வளர்ச்​சியை தக்க வைக்க வேண்​டும். திரா​விட இயக்​கத்​தின் எழுச்​சி​யால் படிப்பை இறுகப்​பிடித்து இளைஞர்​கள் முன்​னேறி​யுள்​ளனர்.

உங்​கள் கையில் இருக்​கின்ற பணிநியமன ஆணை என்​பது, உங்​கள் உழைப்​புக்​கான அங்​கீ​காரம் மட்​டுமல்ல, எதிர்​காலத்​துக்​கான உத்​தர​வாதம். ஒரு கிராம நிர்​வாக அலு​வலர் சரி​யாக பணி​யாற்​றி​னால், அந்த கிராமமே மாற்​றத்​தைக் காணும்.

ஒரு ஆசிரியர் ஒழுங்​காக பணி​யாற்​றி​னால், அறி​வார்ந்த – ஒழுக்​கம் மிகுந்த தலை​முறை உரு​வாகும், ஒரு மருத்​து​வர் கடமை​யுணர்​வுடன் பணி​யாற்​றும்​போது, ஒரு உயிர்காப்​பாற்​றப்​பட்​டு, அவர்​கள் குடும்​பமே மகிழ்ச்​சிக்​குள்​ளாகிறது.

அப்​படிப்​பட்ட மகிழ்ச்​சியை நீங்​கள் சார்ந்த துறை மூல​மாக, தமிழக மக்​களு​டைய வாழ்க்​கை​யில் ஏற்​படுத்த வேண்​டும். மகளிர் உரிமைத் திட்​டம், மக்​களைத்​தேடி மருத்​து​வம், உங்​களு​டன் ஸ்டா​லின் உள்​ளிட்ட முன்​னோடித் திட்​டங்​கள் அரசுக்கு நல்ல பெயரை கொடுத்​திருக்​கின்​றன.

அதற்கு காரணம், அரசு ஊழியர்​களும் ஆசிரியர்​களும்​தான். திட்​டங்​களைத் தீட்டி சட்​டங்​களை இயற்றி பட்​ஜெட் போட்டு நிதி ஒதுக்​கு​கிறோம். இவற்​றின் பலன்​கள் மக்​களுக்கு முழு​மை​யாக கிடைப்​பது அரசு ஊழியர்களிடம் தான் இருக்​கிறது.

கடந்த 5 ஆண்டுகாலத்​தில், 1 லட்​சத்து 55,131 இளைஞர்​களுக்கு அரசு பணி நியமனம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இளைஞர்​களுக்​காக, வளமான தமிழகத்​தின் எதிர்​காலத்​துக்​காக நாங்​கள் கடுமை​யாக உழைத்​துக் கொண்​டிருக்​கிறோம்.

கடமையை மனசாட்​சி​யுடன் செய்​யுங்​கள். நீங்​கள் நேர்​மை​யாக இருந்​தால், அது அரசின் நேர்​மைத் தன்​மையை வெளிப்​படுத்​தும். காலம் தவறாமல், கடமை உணர்​வோடு மக்​களுக்கு எளி​தில் அணுகக் கூடிய​வர்களாக, மக்​களுக்கு பரிவு காட்​டக் கூடிய​வர்​களாக இருக்க வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் பேசி​னார்.

மேலும் இந்​நிகழ்​வில், ஷெனாய் நகரில் ரூ.62.50 கோடி​யில் கட்​டப்பட உள்ள அகில இந்​திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மைய கட்​டிடத்​துக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

அரசு பணி​களுக்​கான போட்​டித்​தேர்​வு​களுக்கு தயா​ராகி வரும் இளைஞர்​களுக்கு உதவும் வகை​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள ‘தேர்​வுக்​களம்’ செயலியை​யும், அரசு ஊழியர்​களுக்கு செயற்கை நுண்​ணறி​வு, தரவு பகுப்​பாய்​வு, திட்ட மேலாண்மை உள்​ளிட்ட திறன்​களை மேம்​படுத்​திக்​கொள்ள ஆன்​லைனில் இலவச​மாக பயிற்சி அளிக்​கும் வகை​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள புதிய இணை​யதளத்​தை​யும் (https://thiran360.tn.gov.in/) முதல்​வர் தொடங்​கி​வைத்​தார்.

இந்​நிகழ்​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், அமைச்​சர்​கள் மா.சுப்​பிரமணி​யன், அன்​பில் மகேஸ், என்​.கயல்​விழி செல்​வ​ராஜ், பள்​ளிக்​கல்​வித்​துறை செயலர் பி.சந்​தரமோகன், சுகா​தா​ரத் துறை செயலர் பி.செந்​தில்​கு​மார், மனிதவள மேலாண்​மைத்​துறை செயலர்​ சி.சமயமூர்த்​தி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *