சிறைபிடிக்கப்பட்ட 7 பாக். வீரர்களை விடுவிக்க பிஎல்ஏ கெடு!!

குவெட்டா: ​
பாகிஸ்​தான் ராணுவத்​தைச் சேர்ந்த 17 வீரர்​களை சிறைபிடித்​துள்​ள​தாக​வும், அவர்​களில் 10 பேரை விடு​வித்​து​விட்​டு, எஞ்​சிய 7 பேரை விடுவிக்க கைதி​கள் பரி​மாற்​றத்​திற்கு ஒரு வாரம் காலக்​கெடு விதித்​துள்​ள​தாக​வும் பலூச் விடு​தலை ராணுவம் (பி.எல்​.ஏ.) நேற்று தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக அந்த அமைப்​பின் ஊடகப் பிரி​வான ‘ஹக்​கல்’ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது:

“சிறைபிடிக்​கப்​பட்ட பாகிஸ்​தான் ராணுவத்​தினரில் 10 பேர் பலூச் இனத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​ப​தா​லும், அவர்​கள் உள்​ளூர் காவல் பணி​களில் ஈடு​பட்​டிருந்​தவர்​கள் என்​ப​தா​லும், அவர்​களுக்கு உரிய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்டு விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த நிலப்​பரப்​பின் எதார்த்த சூழல் மற்​றும் பலூச் மக்​களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. விடுவிக்​கப்​ப​டாத எஞ்​சிய 7 பேரும் பாகிஸ்​தான் ராணுவத்​தின் வழக்​க​மான பிரிவுகளைச் சேர்ந்​தவர்​கள். அவர்​கள் மீது ‘பலூச் தேசிய நீதிமன்றத்​தில்’ விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

அப்​பாவி மக்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யது, பலூச் இளைஞர்​கள் மாய​மான​தில் உடந்​தை​யாக இருந்​தது மற்​றும் இனப்​படு​கொலை உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​கள் அவர்​கள் மீது சுமத்​தப்​பட்​டுள்​ளன. விசா​ரணை​யின் போது அவர்​கள் தரப்பு விளக்​கத்​தைப் பதிவு செய்த பின்​னரே, அவர்​கள் குற்​ற​வாளி​கள் என தீர்ப்பளிக்கப்பட்டது.

அவர்​களுக்​குத் தண்​டனை விதிக்​கப்​பட்ட போதி​லும், மனிதாபிமான அடிப்​படை​யில் பாகிஸ்​தான் அரசுக்கு ஒரு வாரம் காலக்​கெடு விதிக்​கப்​படு​கிறது. இந்த ஏழு நாட்​களுக்​குள் பாகிஸ்தான் சிறை​யில் உள்ள பலூச் கைதி​களை விடு​வித்​து, அதற்​குப் பதிலாகத் தங்​கள் வீரர்​களை மீட்க கைதி​கள் பரிமாற்றத்​திற்கு பாகிஸ்​தான் முன்வர வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒரு வாரத்​திற்​குள் முன்​னேற்​றம் ஏதும் ஏற்​ப​டாத பட்​சத்​தில், நீதிமன்​றத் தீர்ப்​பின்​படி தண்​டனை நிறைவேற்​றப்​படும்​ என்​று பி.எல்​.ஏ. எச்​சரித்​துள்​ளது. இதற்கிடையில் பலுசிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் பிடித்துச் சென்றுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *