மாநகர போக்குவரத்து கழகத்​துக்​கு, குளிர்​சாதன வசதி கொண்ட 100 பேருந்​துகள் உட்பட 194 புதிய பேருந்​துகளின் சேவையை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!!

சென்​னை:
மாநகர போக்குவரத்து கழகத்​துக்​கு, குளிர்​சாதன வசதி கொண்ட 100 பேருந்​துகள் உட்பட 194 புதிய பேருந்​துகளின் சேவையை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்​தார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்​தில், உலக வங்கி மற்​றும் ஆசிய உள்​கட்​டமைப்பு முதலீட்டு வங்​கி​யின் பங்​களிப்​புடன், சென்னை பெருநகர கூட்​டாண்மை திட்​டத்​தின் கீழ் புதிய மின்​சார பேருந்து​கள் இயக்​கப்​படு​கின்​றன.

அதன்படி, சென்​னை​யில் 4-வது கட்​ட​மாக, ரூ.52 கோடி மதிப்​பில், பல்​ல​வன் மத்​திய பணிமனை​யில் மின்​சா​ரப் பேருந்து பணிமனை மற்​றும் ரூ.248.25 கோடி மதிப்​பில் 100 குளிர்​சாதன வசதி கொண்ட மின்​சார பேருந்​துகள், 45 புதிய தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகளை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்​தார்.

இது​போல, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்​துக்​கு, ரூ.30.50 கோடி மதிப்​பிலான இருக்கை மற்​றும் படுக்கை வசதி​யுடன் கூடிய 49 அதிநவீன சொகுசு பேருந்​துகளின் இயக்​கத்​தை​யும் அவர் தொடங்கி வைத்​தார்.

இதில், போக்குவரத்து துறை அமைச்​சர் சிவசங்​கர், இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு, போக்குவரத்துத்துறை செயலர் சுன்​சோங்​கம்​ஜடக் சிரு உட்பட பலர் பங்​கேற்​றனர்.

29 வீரர்களுக்கு நிதியுதவி

தேசிய அளவில் நடை​பெற்ற டேக்​வாண்​டோ, தடகளம், நீச்​சல் மற்​றும் கால்​பந்து போட்​டிகளில் பதக்​கம் வென்ற மாற்​றுத் திற​னாளி​களான 29 வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.24 லட்ச நிதி​யுதவிக்​கான காசோலை​யை, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *