கச்​சத்​தீ​வில் புனித அந்தோணியார் ஆலயத் திரு​விழா தொடங்​கியது!!

ராமேசுவரம்:
கச்​சத்​தீ​வில் புனித அந்தோணியார் ஆலயத் திரு​விழா நேற்று தொடங்​கியது. இன்று காலை சிறப்​புத் திருப்​பலி நடை​பெறுகிறது.

இதையொட்​டி, நேற்று மாலை கச்​சத்​தீவு அந்தோணியார் தேவால​யம் எதிரே​யுள்ள கொடி மரத்​தில் நெடுந்​தீவு பங்​குத் தந்தை பத்​தி​நாதன் கொடியேற்​றி​வைத்​து, விழா​வைத் தொடங்​கி​வைத்​தார்.

ராமேசுவரம் வேர்க்​கோடு பங்​குத்​தந்தை தாமஸ் பரி​பாலனன், யாழ்ப்​பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்​டின் ஞானப்​பிர​காசம். முதன்​மை​குரு ஜோசப் தாஸ் ஜெபரத்​தினம் முன்​னிலை வகித்​தனர்.

தொடர்ந்​து, திருச்​ஜெப​மாலை, இரு​நாட்டு மக்​களும் சேர்ந்து தூக்கி வரும் சிலு​வைப் பாதை நிகழ்ச்​சி, நற்​கருணை ஆராதனை, அந்தோணியார் தேரோட்​டம் நடை​பெற்​றது.

இந்​தியா மற்​றும் இலங்​கையி​லிருந்து வந்​திருந்த பங்​குத் தந்​தையர்​கள், அருட் சகோ​தரி​கள் மற்​றும் பக்​தர்​கள் 7 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.

முன்​ன​தாக, 92 விசைப்​படகு, 26 நாட்​டுப் படகு என 118 படகு​களில் இந்​திய பக்​தர்​கள் 3,741 பக்​தர்​கள் கச்​சத்​தீவுக்கு வந்​தனர். அவரை நேற்று காலை ராம​நாத​புரம் ஆட்​சி​யர் சிம்​ரன்​ஜீத் சிங் காலோன், ராமேசுவரம் மீன்​பிடி துறை​முகத்​திலிருந்து வழியனுப்​பி​வைத்​தார்.

அவர்​களது பாது​பாப்​புப் பணி​யில் இந்​திய கடற்​படை கப்​பல், கடலோரக் காவல் படை மற்​றும் தமிழக மெரைன் போலீ​ஸாரின் ரோந்​துப் படகு​கள் ஈடு​பட்​டன.

கச்​சத்​தீ​வில் பக்​தர்​களின் வசதிக்​காக பல்​வேறு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இன்று (பிப். 28) காலை சிறப்​புத் திருப்​பலி, கூட்​டுப் பிரார்த்​தனை நடை​பெறுகிறது.

கொடி இறக்​கத்​துக்​குப் பிறகு இலங்​கை, இந்​தி​யா​வைச் சேர்ந்த பக்​தர்​கள், தமது நாடு​களுக்​குத் திரும்​பு​கின்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *