அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது யாருக்கும் தெரியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை;
சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் கிராமக்கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

  • எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதற்கு உதாரணம் தான் இந்த விழா.
  • கோவிலுக்குள் அனைவரும் வரலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலைக்கு மாற்றி உள்ளோம்.
  • கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என கூறியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.
  • அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது யாருக்கும் தெரியாது.
  • இறைப்பற்றை பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதுதான்.
  • நான் அதிகமாக கலந்துகொண்ட துறை நிகழ்ச்சி என்றால் அது அறநிலையத்துறையின் நிகழ்ச்சி தான்.
  • தி.மு.க. ஆட்சியில் 4,335 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 29 அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • அறநிலையத்துறையில் 900-க்கும் அதிகமானவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • 11 பெண்கள் உட்பட 41 ஓதுவார்களை நியமனம் செய்துள்ளோம்.
  • கிராம கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 8 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
  • ஆன்மிக பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் தி.மு.க. அரசு.
    இவ்வாறு அவர் கூறினார்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *