பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நான் நடிக்கப் போவதில்லை – நடிகர் சத்யராஜ் அதிரடி!!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நான் நடிக்கப்போவதில்லை என்று நடிகர் சத்யராஜ் விளக்கமளித்துள்ளார்.

மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடியாக நடிக்க நடிகர் சத்யராஜ் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், பாலிவுட்டில் பிரமாண்டமாக தயாராக உள்ளளதாகவும் வெளியான தகவலுக்கு நடிகர் சத்யராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனியார் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நான் நடிக்கப்போவதில்லை; நான் ஒரு பெரியாரிஸ்ட் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பது குறித்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *