அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த சீனா !!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.”சீனா மற்றும் ஈரான் இடையிலான பாரம்பரிய நட்புறவை சீனா பெரிதும் மதிக்கிறது;

ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதில் அந்நாட்டிற்கு
சீனா ஆதரவளிக்கிறது.


மேலும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதிலும் சீனா உறுதுணையாக இருக்கும்” என சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.


மேலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் உடனடியாகத் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், பதற்றங்கள் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் இந்த மோதல் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கும் பரவாமல் தடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும் ஈரானுக்கு ஏவுகணைகளை வழங்கவுள்ளதாக வெளியான செய்திகளைச் சீனா மறுத்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *