பெர்த்:
இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான பகலிரவு டெஸ்ட் நேற்று பெர்த்தில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 62.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்மிருதி மந்தனா 4, ஷபாலி வர்மா 35 ரன்களில் வெளியேறினர்.
பிரதிகா ராவல் 18, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 19, தீப்தி சர்மா 7, ரிச்சா கோஷ் 11 ரன்களில் நடையை கட்டினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 84 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் லூசி ஹாமில்டன் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஸ்னே ராணா 5, சாயாலி 7, கிரந்தி கவுடு 1 ரன்களில் நடையை கட்டினர். கஷ்வீ கவுதம் 34 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அனாபெல் சுதர்லேண்ட் 4, லூசி ஹாமில்டன் 3, டார்சி பிரவுன் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 27 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது.