பிராக்:
செக்குடியரசின் பிராக் நகரில் சர்வதேச பிராக்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் 8-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரஸ்டை எதிர்த்து விளையாடினார். இதில் அரவிந்த் சிதரம்பரம் 63-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
அதேவேளையில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், ஜெர்மனியின் வின்செட் கீமருக்கு எதிரான ஆட்டத்தை 47-வது நகர்த்தலின் போது டிரா செய்தார். 8 சுற்றுகளின் முடிவில் அரவிந்த் சிதம்பரம் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஜோர்டான் வான் பாரஸ்ட் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், செக்குடியரசின் டேவிட் நவரா 4.5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 10 வீரர்கள் பங்கேற்றுள்ள தொடரில் குகேஷ் 2.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளார். இன்று கடைசி சுற்று ஆட்டம் நடைபெறுகிறது.