எதிர் வரும் ஃபிபா உலகக் கோப்பை – 2026 கால்பந்து தொடரின் முழு அட்டவணை வெளியீடு!!

சென்னை:
எதிர்வரும் ஃபிபா உலகக் கோப்பை – 2026 கால்பந்து தொடரின் முழு அட்டவணை வெளியாகி உள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறுகிறது.

இம்முறை ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ என மூன்று நாடுகளில் உள்ள 16 நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் போட்டி ஜூன் 11-ம் தேதி அன்று மெக்சிகோவில் நடைபெறுகிறது. இதில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் விளையாடப்பட உள்ளது.

இதில் குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 11 முதல் 27-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை நடைபெறுகிறது.

அதன் பின்னர் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 4 முதல் 11-ம் தேதி வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி ஜூலை 19-ம் தேதி அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி இரவு 9.30 மணி முதல் மறுநாள் நண்பகல் வரை ஆட்டம் நடத்தும் வகையில் அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு சாம்​பிய​னான அர்​ஜெண்​டினா அணி ‘ஜே’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இந்த தொடரில் குரூப் ஆப் டெத்தாக பிரிவு ‘எல்’ – இங்கிலாந்து, குரோஷியா, கானா பனாமா மற்றும் பிரிவு ‘ஐ’ – பிரான்ஸ், செனகல், நார்வே அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவு அறியப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *