இந்தியாவில் கியாஸ் தட்டுப்பாடு இல்லை – திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி பியூஸ் கோயல்!!

திருச்சி:
மத்திய மந்திரி பியூஸ் கோயல் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தமிழகத்தில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது.

இந்திய அளவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் இப் போது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஊழல் அரசாக உள்ளது. இதனை அகற்றுவதற்கு மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்கும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி உள்பட கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். தொகுதி பங்கீடு குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையுமா? என்பது பற்றி தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்.


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவதற்கு முயற்சிக்கிறார்.

அதனால் தமிழக வாக்காளர்கள் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
அமெரிக்கா-ஈரான் போரை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்கள் விலை உயரும்.

கியாஸ் தட்டுப்பாடு என வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் இந்தியா அளவில் கியாஸ் தட்டுப்பாடு இல்லை. இதுபற்றி அந்த துறை சார்பில் தெளிவான அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *