மதுரை மத்திய தொகுதியில் குடும்பத்துக்கு ஒரு நாற்காலி பட்டுவாடா செய்யும் பணி தொடங்கியது!!

மதுரை:
மதுரை மத்திய தொகுதியில் குடும்பத்துக்கு ஒரு நாற்காலி பட்டுவாடா செய்யும் பணி தொடங்கியது. அமைச்சரின் இந்த மனமாற்றம் வாக் காளர்கள் மத்தியில் ஆச்சரி யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால், திமுக, அதிமுகவில் ‘சீட்’ உறுதியான எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்கள் தொகுதிகளை தக்க வைக்கவும், மீண் டும் வெற்றிபெறவும் வாக் காளர்களை பல்வேறு வகைகளில் கவனிக்கத் தொடங்கி விட்டனர்.

மதுரை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள அதிமுக, திமுக எம்எல்ஏ-க்கள் தங்கள் தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் என்ற போர்வையில், ஹாட் பாக்ஸ், குடம், பிளாஸ்டிக் வாளி, டிபன் கேரியர், சேலை உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்களை வழங்கி வாக்காளர்களை `கவனித்து’ வருகின்றனர்.

ஆனால், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு 2 முறை எம்எல்ஏ-வான அமைச்சர் பழனிவேல் ராஜன், “தான் ஒருபோதும் வாக்காளர்களுக்கு வாக்குகளைப் பெறுவதற்கு பரிசுப்பொருளோ, பணமோ கொடுக்க மாட்டேன்’’ என்று வெளிப்படையாகவும், பெருமையாகவும் பேசினார்.

இந்நிலையில் திடீரென்று மதுரை மத்திய தொகுதியில் கடந்த சில நாட்களாக மற்ற எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களை போல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வாக்காளர்களுக்கு ஒரு (குடும்பத்துக்கு) குடும்ப அட்டைக்கு ஒரு சேர் (பிளாஸ்டிக் நாற்காலி) என்ற அடிப்படையில் பரிசுப் பொருள் கொடுக்க தொடங்கியுள்ளார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறையும், தான் தொகுதிக்கு என்ன செய்தேன் என்ற செயல்பாட்டு அறிக்கையை வீடு, வீடாக பொதுமக்களுக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி அவரது ஆதரவாளர்கள், இந்த செயல்பாட்டு அறிக்கையை தற்போது வீடு, வீடாக வழங்கும்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடுத்து அனுப்பிய நாற்காலியையும் வழங்கி வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வழக்கத்துக்கு மாறாக தனது நடைமுறையை மாற்றிக் கொண்டது அவரது தொகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சரின் இந்த மனமாற்றம், அடுத்து அவர் என்ன கொடுக்கப் போகிறார் என்ற ஆவலையும், மத்திய தொகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *