ஏஎஃப்சி மகளிருக்​கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர்- சீன தைபேவிடம் வீழ்ந்தது இந்திய அணி!!

சிட்னி:
ஏஎஃப்சி மகளிருக்​கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்​திரேலி​யா​வின் சிட்னி நகரில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் நேற்று சீன தைபே அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது.

வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் இந்த ஆட்​டத்​தில் இந்​திய மகளிர் அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்​தது.

இந்​திய அணி தரப்​பில் 39-வது நிமிடத்​தில் மனிஷா கல்​யான் கோல் அடித்​தார். அதேவேளை​யில் 45+9-வது நிமிடத்​தில் இந்​திய அணி​யின் எலங்​பம் பாந்​தோய் சானு, சுய கோல் அடித்து ஏமாற்​றம் அளித்​தார்.

சீன தைபே அணி தரப்​பில் 12-வது நிமிடத்​தில் சு யு சன்னும், 77-வது நிமிடத்​தில் யு ஷின் சென்​னும் தலா ஒரு கோல் அடித்து அசத்​தினர்.

இந்​திய மகளிர் அணிக்கு இது ஹாட்​ரிக் தோல்​வி​யாக அமைந்​தது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் வியட்​நாம் அணி​யிட​மும், 2-வது ஆட்டத்தில் ஜப்​பான் அணி​யிட​மும் தோல்வி அடைந்திருந்தது.

3 தோல்வி​களின் மூலம் இந்​திய அணி அடுத்த சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​தது. சீன தைபே அணிக்கு எதி​ராக ஆட்​டத்​தின் பெரும் பகு​தி​யைத் தனது கட்டுப் பாட்டில் வைத்​திருந்​தும், கோல் அடிப்​ப​தற்​கான பல வாய்ப்​பு​களையும் இந்​திய அணி உரு​வாக்​கியது.

ஆனால் ஆட்​டத்தின் இறு​திப் பகு​தி​யில் அந்த வாய்ப்புகளை கோல்​களாக மாற்ற இந்​திய அணி தவறியது.

முதல்​முறை​யாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்​றிருந்த இந்​திய அணி மோசமான செயல் திறன் காரண​மாக லீக் சுற்​றுடன்​ வெளியேறி உள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *