சென்னை:
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐசிஎஃப் – டிபிஒய்சி கீழ்ப்பாக்கம் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஐசிஎஃப் அணி 2-0 என்ற கால் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 28-வது நிமிடத்தில் ஸ்ரீகுட்டனும், 64-வது நிமிடத்தில் நரேஷும் கோல் அடித்து அசத்தினர்.
சிறந்த வீரராக ஐசிஎஃப் அணியின் ஆல்பின் வால்டர் தேர்வானார்.