இந்தியன் வெல்ஸ்:
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆன்ட்ரே கோரன்சன் ஜோடி ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர், இத்தாலியின் ஆண்ட்ரியா வவாசோரி ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
ஆயிரம் புள்ளிகள் கொண்ட ஏடிபி மாஸ்டர்ஸ் தொடரில் யுகி பாம்ப்ரி அரை இறுதிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். அரை இறுதி சுற்றில் பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெக், மொனாக்கோவின் வாலண்டைன் வச்செரோட் ஜோடியுடன் மோதுகிறது.