இந்தியன் வெல்ஸ்:
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் ஜேக் டிராப்பர், 5 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார்.
இதில் ஜேக் டிராப்பர் 4-6, 6-4, 7-6 (5) என்ற செட் கணக்கில் போராடி ஜோகோவிச்சை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
24 வயதான ஜேக் டிராப்பர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 8 மாதங்களாக விளையாடாத நிலையில் தற்போது இந்தியன் வெல்ஸ் தொடரில் ஜோகோவிச்சை தோற்கடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கால் இறுதி சுற்றில் அவர், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவுடன் மோதுகிறார். 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள 38 வயதான ஜோகோவிச், இந்தியன் வெல்ஸ் தொடரில் கடந்த 2008, 2011, 2014, 2015, 2016 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தற்போது கால் இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறி உள்ளார்.
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் தன்னை வீழ்த்திய ஜேக் டிராப்பருக்கு வாழ்த்து தெரிவித்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.