5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே தனது முதல் ஆட்​டத்​தில் 30-ம் தேதி ராஜஸ்​தான் ராயல்​ஸுடன் மோதல்!! மனம் திறக்கும் சஞ்சு சாம்சன்….

சென்னை:
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்க உள்​ளது. 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே தனது முதல் ஆட்​டத்​தில் 30-ம் தேதி ராஜஸ்​தான் ராயல்​ஸுடன் மோதுகிறது.

இந்த ஆட்டம் குவாஹாட்​டி​யில் நடை​பெறுகிறது. இம்​முறை சிஎஸ்கே அணி​யில் சஞ்சு சாம்​சன் களமிறங்​கு​கிறார். கடந்த சில சீசன்​களில் அவர், ராஜஸ்​தான் அணிக்​காக விளை​யாடி இருந்​தார்.

இதனால் சிஎஸ்கே – ராஜஸ்​தான் அணி​கள் இடையி​லான போட்டி இப்​போதே மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்படுத்தி உள்​ளது.

இந்​நிலை​யில் சஞ்சு சாம்​சன் கூறும்​போது, “ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதி​ராக நான் விளை​யாட போவது இதுவே முதல் முறை.

ஆனால், களத்​தில் உணர்ச்​சிகள் என்னை ஆட்​கொள்ள நான் அனு​மதிக்​க​மாட்​டேன்.

அந்த அணி​யில் எனது காலம் முடிந்​து​விட்​டது என உணர்ந்​த​தால்​தான் அங்​கிருந்து வெளி​யேறினேன்.

இப்​போது நான் அவர்​களுக்கு எதி​ராக மோதுகிறேன். இதனால் எனது சிறந்த ஆட்​டத்​தையே வெளிப்​படுத்​து​வேன்​” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *