”விஜய் நமக்கு போட்டியா இருக்கிறது நல்லது தான் என்று கருத்து தெரிவித்த நடிகை நமீதா”!!

தமிழ்நாட்டின் மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக கூட்டணியென அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளில் திரை நட்சத்திரங்கள் பலரும் கட்சிகளுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவை பொறுத்தவரை நடிகை நமீதா வடசென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் திருப்பூரில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை நமீதாவிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் , முதலில் நான் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் ரொம்ப புத்திசாலி. இப்படி ஒருத்தர் நமக்கு போட்டியா இருக்கிறது நல்லது தான் என்று கருத்து தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *