புதுச்சேரியில் பிரேமலதா விஜயகாந்த் 3 தொகுதிகளில் போட்டி!!

சென்னை,
புதுச்சேரியில் 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று பொதுச்செயலாளர் பிரேமலதா ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:-

தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தே.மு.தி.க. கூட்டணி அமைத்துள்ளது. மகத்தான வெற்றி கிடைக்கும்.


தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைக்கவில்லை என்பது கற்பனை செய்தி. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஓரிரு நாட்களில் தே.மு.தி.க.வை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை அறிவிப்பு வெளியாகும்.

புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *